கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் படத்தில் விஜய் சேதுபதி?

நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் மலையாளத் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க |  வெளியானது நடிகர் விஜய்யின் வாரிசு 3வது போஸ்டர்

19(1)(a) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் இந்து இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். 

கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் கதையம்சத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிக்க |  நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் ட்வீட் 

படத்தலைப்பான 19(1)(a) என்பது இந்திய அரசியலமைப்பின் கருத்து தெரிவிக்கும் உரிமையை உறுதி செய்யும் சட்டப்பிரிவாகும். இந்நிலையில் இந்தத் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.