நோய் தடுப்பு மருந்தாக செயல்பட்டு உடல் நலத்தை காக்கும் நெல்லிக்காய் !!

நெல்லிக்காக்காயில் இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளன. நெல்லிக்காயை சாதத்துடன் அடிக்கடிச் சேர்த்து வந்தால் நோய் தடுப்பு மருந்தாகச் செயல்பட்டு உடல் நலத்தைக் காக்கும்.


நெல்லிக்காய் ஊறுகாயைத் தினசரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே ஏற்படாது. மலத்தை இளக்கி வெளியேற்றும்.

காயை நசுக்கி, சாறு பிழிந்து சர்பத் ரூபமாக காய்ச்சிக் குடித்துவர, வாயுத் தொல்லைகள் குறையும். உடல் அசதி மறையும்.

சுத்தமான தேனில் நெல்லிக்காயைப் போட்டு ஊற வைத்துப் பல நாட்கள் கழித்து எடுத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டுப் பாலைக் குடித்தால் வீரிய சக்தி ஏற்பட்டு இளமையை உண்டாக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ், தேனையும் சம அளவு கலந்து உட்கொள்ள நெடுநாள் பட்ட விக்கல் விலகி ஓடும். மூச்சுத்திணறல் சமனப்படும்.

நெல்லிக்காய் ஜூஸ் வெந்துபோன உறுப்புகள் குணமடையும் ரத்தத்தில் கலந்துள்ள விஷப் பொருள்கள் வெளியேறும் நெல்லிச் சாறு கிடைக்கவில்லை என்றாலும் நெல்லி சூரணத்தையோ நெல்லி லேகியத்தையோ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதனால் மது அருந்தியதால் ஏற்பட்ட உடன் உறுப்பு பாதிப்புகள் சீர் பெறும்.

நெல்லிச்சாறு விதை நீக்கிய நெல்லிக்கனிகளுடன் எலுமிச்சை இலையை சேர்த்து அரைத்து அதைப் பாலுடன் சேர்த்து நரை விழுந்த பகுதியில் அழுத்தி தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின் குளித்து வந்தால் நரை நீங்கும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.