தச வாயுக்களையும் சீராக இயங்கச் செய்து உடலை வலுவாக்கும் தேக சுத்தி யோகா... பயிற்சி - 4

யோகம் செய்வதற்கே ஒரு யோகம் வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். யோகத்தின் பலனே சீரான உடல் ஆற்றல் தான். யோகத்தின் மற்றொரு முக்கிய பலன் கழிவை முறையாக நீக்க உதவுதல். அழுக்கான அறை நமக்கு எரிச்சலைக் கொடுக்கும். அதேபோன்று அழுக்குகள் நம் உள்ளுறுப்புகளில் தேங்குவதும் நம் உடலுக்குப் பிடிக்காததுதானே. அவ்வாறு உள்ளுறுப்புகளில் தேங்கும் கழிவுகளை, அழுக்குகளை, விஷங்களை நீக்கவே தேக சுத்தி யோகப் பயிற்சி உதவுகிறது.

யோகா குரு மு. அரி

மூலாதாரந் தோன்றி சகலமுமாய் நிற்கும் பிராணன், மல சலங்களை கழிப்பிக்கும் அபானன், விக்கல், கக்கல் வழி நிற்கும் உதானன், அன்ன சாரத்தை 72,000 நாடிகளில் சேர்த்து வைக்கும் வியானன், உடலின் ஆற்றலை சமமாக இருக்கச் செய்யும் சமானன், இருமல், தும்மலை உருவாக்கும் நாகன், கண்ணாற்றலைச் சரி செய்யும் கூர்மன், சோம்பல், கொட்டாவிகளை உண்டு பண்ணும் கிரிகரன், இமைத்தல், நகைத்தலை கட்டுப்படுத்தும் தேவதத்தன், உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் தான் பிரியாமல் நின்று உடலைச் சிதைக்கச் செய்து, இறுதியில் கபாலத்தின் வழியே செல்லும் தனஞ்செயன். இந்த 10 வாயுக்களும் நம் உடலில் சரிவர இயங்கினால்தான் நம் உடல் ஆரோக்கியமாகச் செயல்படும் என்பது சித்தர்கள் விதி.

ஆனால் உடலின் கழிவுகள் ஒழுங்காக வெளியேறவில்லை என்றால் இந்த வாயுக்கள் சிரமப்படும். இதனால் நம் உடலின் ஆற்றல் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் வாய்ப்படும் என்பதே உண்மை. நோய்களை அகற்றவும் வராமல் தடுக்கவும் எளிய முறையிலான யோகப் பயிற்சிகள் உங்களுக்கு உதவும். எனவே இந்தப் பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள்.

இந்தப் பயிற்சியின் பலன்கள்:

பல காலமாக நம் உள்ளுறுப்புகளில் தேங்கியுள்ள அசுத்தங்கள், விஷங்கள், கழிவுகள் நீங்கினால் நம் உடல் இளமையாகும். அதனால் வாழ்வே இனிமையாகும்.

யோகா குரு அரி

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு:

இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும். சுத்தி முறைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 11.10.2020

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.