கார்டு இல்லாமல் ATMமில் பணம் எடுக்கும் வசதி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் கட்டண முறைகள் மற்றும் டிஜிட்டல் பரிசோதனைகளுக்கு இடையில், ஏடிஎம் சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே ஏடிஎம் கார்டு களவு போகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி தற்போது விரைவில் ATMமில் என்ற முறையில் அனைத்து வங்கிகளிலும் அறிமுக படுத்த முடியும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதை அணைத்து வங்கிகளில் செயல்படுத்துவதற்கான முயற்சியையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.


எனவே இனி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையான கார்ட்லெஸ் ATM என்ற முறை விரைவில் அறிமுகப்படுத்த முடியும். கடந்த மாதம் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கலந்துரையாடி கார்டுலெஸ் ATM பரிவர்த்தனைகளை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ATM பரிவர்த்தனைகள் மற்றும் அனைத்துவிதமான நெட்வொர்க்குகள் விரைவில் மாதிரி வடிவமைப்பு பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் கூறுகையில், கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி ஒரு சில வங்கிகளில் மட்டுமே தற்போது வரை நடைமுறையில் உள்ளது. அனைத்து வங்கிகளிலும் இந்த நடைமுறை இருந்தால் டிஜிட்டல் முறையில் செய்யப்படும். கார்டு தொலைந்து போவது, திருடப்படுவது, போலியான பரிவர்த்தனைகள், கார்டு மோசடி ஆகியவை தவிர்க்கப்பட்டு ஏடிஎம் பரிவர்த்தனைகள் எளிதாக்கப்படும் என்றும் கூறினார்.

Input & Image courtesy: News 18

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.