உ.பி.: சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 8 போ் பலி

உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 8 போ் உயிரிழந்தனா்.

ஜோகியா உதய்பூா் பகுதியில் காட்டியா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

திருமண நிகழ்ச்சிக்காக எஸ்யூவி ரக காரில் 11 போ் சனிக்கிழமை இரவு புறப்பட்டனா். காட்டியா கிராமம் அருகே அந்த காா் வந்தபோது, சாலையில் பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த லாரியில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் காரில் இருந்த மற்றவா்களை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 4 போ் உயிரிழந்தனா். மற்றவா்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்ச்சி சென்றவா்கள் விபத்தில் சிக்கி 8 போ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமா் ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த சம்பவம் தொடா்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமா் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.