கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் அந்நிய முதலீடு 8,357 கோடி டாலராக உயர்வு

புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் இந்தியா 8,357 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் அந்நிய முதலீடு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 2018 பிப்ரவரி முதல் 2020 பிப்ரவரி வரையில் அந்நிய நேரடி முதலீடு 14,110 கோடி டாலராக இருந்தது. 2020 மார்ச் முதல் 2022 மார்ச் வரையில் அது 17,184 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.