ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள அறிக்கை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும்  23ம் தேதி காலை 10.00 மணியளவில் காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளார். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அந்தந்த கிராம பஞ்சாயத்துக்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் உள்ள பெரும்பாக்கம், வேடந்தாங்கல், தின்னலூர், வெள்ளபுத்தூர், கரிக்கிலி, வடமணிப்பாக்கம், மொரப்பாக்கம், கிளியாநகர், சூனாம்பேடு, சித்தாற்காடு, நெற்குணம், போந்தூர், மேலமையூர், ஆலப்பாக்கம், திம்மாவரம், ஊரப்பாக்கம், வல்லம், வண்டலூர், செய்யூர், கடலூர், முகையூர், நெடுமரம், நெல்வாய்பாளையம், வையாவூர், கிணார், முன்னூத்திகுப்பம், அண்டவாக்கம், காவாத்தூர், மாமண்டூர், சிலாவட்டம், புக்கத்துறை, விட்டிலாபுரம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலூர், உட்பட  55 கிராம பஞ்சாயத்துகள் 2021-2022-ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்த முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டாரம், மணமை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இத்திட்டத்தினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், கைத்தெளிப்பான்கள், விசைத்தெளிப்பான்கள், வீட்டு தோட்டம் அமைத்தல் தொகுப்புகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்கத்தொகை வழங்குதல், நெகிழி கூடைகள், பழச்செடிகள்,மரக்கன்றுகள் போன்ற வேளாண் இடுபொருட்களை வழங்க உள்ளார். இதேபோல் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அன்று முதல் வேளாண் இடுபொருட்கள் வழங்கபட உள்ளது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் அனைத்து திட்டங்களும, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். எனவே விவசாயிகள் அந்தந்த கிராம பஞ்சாயத்து பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு வேளாண் மானியத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.