வேகமாகப் பரவிவரும் குரங்கு காய்ச்சல்; 9 நாடுகளில் தீவிரம்; அவசர கூட்டத்தை கூட்டிய WHO!

கோவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து பல நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தற்போது புதிய நோய்த் தொற்று ஒன்று பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

குரங்கு காய்ச்சல் (Monkeypox) எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் ஐரோப்பாவில் 100 நபர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்று வெடிப்பாக இது கருதப்படுகிறது. வேகமாகப் பரவி வரும் இந்தத் தொற்று குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமையன்று உடனடியாக அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

WHO - உலக சுகாதார நிறுவனம்

பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் மிகப்பெரிய அளவில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

நோய்த்தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு (skin rashes) போன்றவை உண்டாகும். நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது நோய்த்தொற்று பரவும். அதாவது இருமும்போது வெளிப்படும் எச்சில் மூலமாகவும், உடல் திரவங்கள் மூலமாகவும் மிகவும் அருகில் இருப்பவர்களுக்கு இந்தத் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Fever

இந்தத் தொற்று முதன்முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. குரங்குகளிடமிருந்து தற்போது மனிதர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ள இந்தத் தொற்று, கோவிட் 19 போல் அல்லாமல் லேசான தொற்றாகவும், எளிதில் பரவாமல், நெருங்கிய தொடர்பின்போது மட்டுமே பரவக்கூடியதாகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆறுதல் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.