பிரதோஷ நாளில் விரதம் மேற்கொண்டு சிவ பூஜை செய்வதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் உண்டு. அமாவாசைக்கு முன்னதாக மூன்றாம் நாளில், பிரதோஷம் வரும். அதேபோல, பெளர்ணமிக்கு மூன்று நாள் முன்னதாக பிரதோஷம் வரும்.


மாதந்தோறும் வருகிற இரண்டு பிரதோஷத்தின் போதும், சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். முக்கியமாக அன்றைய தினத்தில், பிரதோஷ நாயகன், சிவாலயத்தில் கொடிமரத்துக்கு அருகில் இருக்கும் நந்திதேவர்தான். அன்றைய நாளில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.

பிரதோஷ காலம் என்பது 16.30முதல் 18.00மணி வரை. இந்தக் காலத்தில்தான் பூஜைகள் நடைபெறும். பிரதோஷத்தன்று சிவபூஜையில் கலந்து கொண்டு தரிசிப்பதும் சிவநாமம் சொல்லி வழிபடுவதும் பாவங்களைப் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

பிரதோஷ நாளில் விரதம் மேற்கொண்டு சிவ பூஜை செய்வார்கள் சில பக்தர்கள். மாத சிவராத்திரிக்கு  விரதம் மேற்கொள்வது போல், பிரதோஷத்திலும் விரதம் மேற்கொள்வார்கள்.

பிரதோஷ நாளில், பசுவுக்கு உணவளிப்பதும் அகத்திக்கீரை வழங்குவதும் வீட்டு தரித்திரத்தை விலக்கும். கடன் முதலான பிரச்சினைகள் தீரும்.

நமசிவாயம் சொல்லி, சிவனாரை வணங்குவதால், எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குறைகள் அனைத்தும் நீங்கப் பெறும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.