எல்லாத்துக்கும் கருணாநிதி பெயர் வைக்க நினைப்பது ஒரு மனவியாதி - திருவாரூரில் விளாசிய அண்ணாமலை

திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மனவியாதி என திருவாரூரில் நடந்த போராட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

திருவாரூர் தேர் ஓடும் தெற்கு வீதியை தி.மு.க அரசு கலைஞர் கருணாநிதி வீதி என பெயர் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் நேற்று திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தின் கலாச்சாரத்தை மாற்றுவதற்கான முயற்சியுடன் தி.மு.க செயல்பட்டுவருகிறது தி.மு.க ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு இரண்டு சாதனைகளை செய்தது ஒன்றும் மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மற்றொன்று ஊரின் பெயரை மாற்றுவது என்றார்.

திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மனவியாதி குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு தான் இந்த வியாதி வரும் எனவும் அவர் விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்ற மாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், ஆனால் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை! இல்லாததால்தான் இந்த பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளோம் இதனை மீறி திருவாரூர் தெற்கு வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பா.ஜ.க முற்றுகை போராட்டம் நடத்தும் என்றார் அண்ணாமலை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.