லீக் சுற்று இன்றுடன் நிறைவு கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்-பஞ்சாப் மோதல்

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி ஆட்டத்தில் ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. 70வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, வாங்கடே மைதானத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டம் சம்பிரதாயமான ஒன்றாகவே அமைந்துள்ளது. பஞ்சாப், ஐதராபாத் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் 7வது, 8வது இடங்களில் இருக்கின்றன. கவுரவமான இடத்தை பிடிக்க இரு அணிகளும் முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இதுவரை..*  ஐதராபாத் - பஞ்சாப் 18 முறை மோதியுள்ளதில், ஐதராபாத் 13-5 என முன்னிலை வகிக்கிறது.* அதிகபட்சமாக முன்னாள் சாம்பியன் ஐதராபாத் 212 ரன், பஞ்சாப் 211 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 119 ரன், ஐதராபாத் 114 ரன் எடுத்துள்ளன.* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஐதராபாத் 4-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.* நடப்புத் தொடரில் இரு அணிகளும் ஏப்.17ல் நடந்த 28வது லீக் ஆட்டத்தில் மோதின. பஞ்சாப் 20 ஓவரில் 151 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஐதராபாத் 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வென்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.