கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்த வகையிலும் ஏற்கக் கூடியதல்ல

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்த வகையிலும் ஏற்கக் கூடியதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்த வகையிலும் ஏற்கக் கூடியதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதாயத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், எழுத்தாற்றல் மூலம் ஆற்றிய மகத்தான தொண்டை போற்றுகிற வகையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது. சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஒரு மாத காலம் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள கடற்கரை பகுதியில் அதிகாலையில் ஆய்வு செய்து அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என்று அறிக்கை வழங்கியிருக்கிறது. இதையும் படிக்க- மதுபோதையில் மனைவியைத் தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ஏறத்தாழ 10 மைல் தொலைவிற்கு கடலில் தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்கள்?. மலிவான அரசியல்வாதிகளிடம், மலிவான விமர்சனத்தைத் தான் எதிர்பார்க்க முடியும். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு 133 அடி உயரத்தில் குமரி முனையில் திருவுருவச் சிலை அமைத்த கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதை எதிர்ப்பவர்களின் வாதம் எந்தவகையிலும் ஏற்கக் கூடியதல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அணுகுமுறையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செயலாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக, மெரீனா கடற்கரையையொட்டிய கடலில் பேனா வடிவ சின்னம் அமைப்பது குறித்து சென்னையில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை கருத்துக் கேட்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், கடலுக்குள் நினைவுச் சின்னம் வைத்தால் பவளப்பாறைகள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்தாா்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.