ஓராண்டுக்குள் பணியில் இருந்து விலகும் 30% பெண்கள்... டெக் துறையில் என்ன நடக்கிறது..?

உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் 31% பெண்கள் 12 மாதங்களுக்குள் தங்களது வேலையை விட்டுவிட நினைக்கிறார்கள் என ஆய்வு தெரிவித்துள்ளது.

டெக்னாலஜி துறையில் பெண்களும் அதிக அளவில் வேலைக்குச் சேரத் தொடங்கியுள்ளனர். ஆனால், வேலைக்குச் சேரும் பெண்கள் அனைவரும் அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்கிறார்களா என்பது கேள்விக் குறி. இந்நிலையில், கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கில்சாஃப்ட் நிறுவனம் (Skillsoft) ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 

Work

செப்டம்பர் 2023 முதல் ஜனவரி 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட பதில்களைப் பெற்றது. அதனடிப்படையில் `தொழில்நுட்பத்தில் பெண்கள்’ (Women in Tech) எனத் தலைப்பிடப்பட்ட வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. 

அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்…

*உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (31 சதவிகிதம்) அடுத்த 12 மாதங்களில் பணியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளனர்.

*40 சதவிகித பெண் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறுவதற்கு துறை அல்லது நிறுவனத்தின் நிர்வாகமே முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர். 

*39 சதவிகிதத்தினர் பயிற்சி மற்றும் வளர்ச்சியின் பற்றாக்குறையைச் சுட்டிக் காட்டியுள்ளனர். 26 சதவிகித பெண்கள் அதிக சம்பளம் தராததால் வேலையை விட்டு விலகுவதாகக் கூறியுள்ளனர்.

*ஆய்வில் பங்கேற்றுப் பதிலளித்தவர்களில், 85 சதவிகிதத்தினர் தங்கள் டீமுக்குள் பாலின வேறுபாடு இருப்பதாகவும், 38 சதவிகிதத்தினர் தங்கள் வளர்ச்சித் திறனில் அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

*பதிலளித்தவர்கள் நிர்வாக ஆதரவு (29 சதவிகிதம்), தற்போதைய ஊதியம் (28 சதவிகிதம்) மற்றும் பன்முகத்தன்மை, சமபங்கு (25 சதவிகிதம்) ஆகியவற்றில் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

டெக்னாலஜி துறையில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சவாலாக உருவெடுக்கும் ஏஐ…

தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான தடையாக இருப்பது பயிற்சியின்மை, அதிலும் குறிப்பாக ஏஐ (GenAI) தொழில்நுட்பத்தில் பயிற்சி குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

41 சதவிகித பெண்கள் ஏஐ-ல் பயிற்சி பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.