லேப்ரடார் நாயுடன் கயல் சந்திரன் நடிக்கும் சிங்கா – நாளை வெளியாகிறது டீஸர்!

கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். தற்போது இவர் நடித்து வரும் படம் சிங்கா. இவ்ருடன் லேப்ரடார் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடிக்கு வருகிறது. ராஜதுரை சிங்கம் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படம் மனிதருக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கயல் சந்திரனுக்கு ஜோடியாக மலையாள நடிகைகளான சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, மலையாள நகைச்சுவை நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு இப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.