சொந்த மைதானத்தில் மும்பை தோல்வி.. பந்தாடிய பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 24-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, தொடக்கத்திலேயே நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவை இழந்தது. இருப்பினும், குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 112 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக நமன் தீர் 50 ரன்கள் எடுக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அதிரடியான அடித்தளம் அமைத்தது.
பிரப்சிம்ரன் 39 பந்துகளில் 80 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் விளாசினர். இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 16.3 ஓவர்களிலேயே 198 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் அசத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த மும்பை 9வது இடத்தில் உள்ளது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.