தவறான ரிப்போர்ட் அளித்த தனியார் லேப் - உயிரிழந்த கொரோனா நோயாளி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்கி அதிகாரி ஒருவருக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருமல் வரவே, போலி கொரோனா பரிசோதனை மையம் ஒன்றிடம் ஆய்வு செய்துள்ளார். அந்த, ஆய்வில் நெகட்டிவ் என்று சொன்னதை நம்பி மருத்துவமனைக்குச் செல்லாமல் விட்டிருக்கிறார். பின்பு, அவரினின் நிலைமை நிலைமை மிகவும் கடவலைக்கிடமாகவே, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் ’இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. முன்னரே அழைத்து வராமல் மோசமடைந்த பிறகு வந்திருக்கிறீர்களே?’ என்று கண்டித்திருக்கிறார்கள். அப்போதுதான், வங்கி அதிகாரிக்கு கொரோனா என்பது தெரிய வந்துள்ளது.

image

இதனால் ”எனது கணவருக்கு முன்னரே கொரோனா பாஸிட்டிவ் என்று போலி கொரோனா பரிசோதனை மையம் சொல்லியிருந்தால்,  அவரை  மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியிருப்போம்” என்று கதறித்துடித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அவரின் மனைவி. புகாரின் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், அரசு முத்திரைகள் கொண்டே அரசு அங்கீகரித்த மையம் போல் செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. “பரிசோதனை மையத்தின் உரிமையாளர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்ய ஒரு இளைஞரை அனுப்பியுள்ளார். அந்த மாதிரியை எடுத்துக்கொண்டுப் போனவர்கள் போன் செய்து நெகட்டிவ் வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள்” என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.