வளர்ப்பவரிடம் பேசும் பூனை! வைரலாகும் வீடியோ!

செல்லப்பிராணியான பூனை தனது வளர்த்துவரும் பெண்ணின் கேள்விகளுக்கு மனிதர்கள் ’ஆமாம்’ போடுவதுபோலவும் ஆச்சர்யப்படுவது போலவும் பேசி குரல் கொடுப்பது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. மிகிதா என்று பெயரிடப்பட்டுள்ள கருப்பு நிறத்திலான அழகிய பூனை, தனது வீட்டு உரிமையாளர் பெண்மணி பேசும்போது மனிதர்களைப் போலவே குரல் கொடுத்து பதிலளிக்கிறது.

image

https://www.instagram.com/p/CDUwDgWhbzy/

உணவு வேண்டுமா? என்று கேட்டால் ‘ ஆங்’ என்றுக்கூறி ஆச்சர்யப்படுத்துகிறது. இன்ஸ்டாமிராமில் ’சிகாகோ பிளாக் கேட்’ என்ற பெயரில் இந்த பூனையின் வீடியோக்கள் தொடர்ந்து பகிர்ந்து வரப்படுகின்றன. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், அந்த இன்ஸ்டாகிராம் ஐடியை பூனை இயக்குவது போன்றே, அதன் பெயரிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூனைப் பக்கத்தை இரண்டு லட்சம் பேர் ஃபாலோவ் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.