ஆனா தங்கம் சார்...: உலக அரங்கில் மிரட்டப்போகும் கைதி திரைப்படம்!!

நடிகர் கார்த்தியின் சிறந்த படத்தின் பட்டியலில் கைதி நிச்சயம் இடம் பெறும். சிறப்பான நடிப்பின் மூலம் கைதியில் லாரி ஓட்டுநராகவே வாழ்ந்தார் கார்த்தி.

தற்போது மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தில் அதிக கவனத்தை பெற்றவர். பின்னர் இவர் கைதி திரைப்படத்தில் எதிர்பார்க்கப்பட்டார். படத்தின் ஹீரோ கார்த்தி. மீண்டும் ஒரு பருத்திவீரன் கெட்டப் போல கைலி, சட்டை என லாரி ஓட்டுநராக அறியப்பட்ட கார்த்திக்குக்கு ஜோடி இல்லை என்றது படக்குழு. கதாநாயகி இல்லையா என ஆச்சரியப்பட்ட போது படத்தில் பாடல்களும் இல்லை என்றார்கள்.

image

நாயகி இல்லை, பாடல்கள் இல்லை என ஒரு முன்னனி ஹீரோவை வைத்து தியேட்டருக்குள் நுழைந்தது கைதி. ஆரம்பம் முதலே படபடவென வெடிக்கத் தொடங்கிய கைதி திரைப்படம் முடியும் வரை வெடித்து தள்ளியது. ஒருநாள் இரவு என ஒரு இரவுப்பயணமாய், அழகான அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து ஒரு அதிரடி திரைப்படத்தை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற கைதிக்கு தற்போது மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது.

image

டொரன்டோவில் நடைபெற உள்ள உலக திரைப்படவிழாவிற்கு கைதி தேர்வாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். உலக அரங்கில் கொண்டாடப்பட வேண்டிய தரம் கைதி திரைப்படத்திற்கு இருப்பதாகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.