இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரத்துக்கு அனுமதி இல்லை; தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற வேண்டும் - சத்யபிரத சாஹு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ம் தேதி மாலை வாக்குப்பதிவு நடந்து முடியும் வரைபொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19-ம் தேதிவாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல்பறக்க நடந்துவந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.