`இஸ்ரேலைத் தாக்க வடகொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதா? - வடகொரியா விளக்கம்

பாலஸ்தீனத்துக்கும் - இஸ்ரேலுக்கும் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தம் சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹமாஸ்  படையினர் வடகொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருக்கிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

இது குறித்து அமெரிக்க அரசால் நிதியுதவி செய்யப்படும் ரேடியோ ஃப்ரீ ஏசியா(Radio Free Asia) என்ற தனியார் செய்தி நிறுவனம்,"இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான தாக்குதலில் வட கொரிய ஆயுதங்கள் முக்கியமாக ராக்கெட் லாஞ்சர்கள் (Rocket launcher) பயன்படுத்தப்படுகிறது" எனக் கடந்த 10-ம் தேதி செய்தி வெளியிட்டது.

மேலும், ஹமாஸ் படையினர் பயன்படுத்திய சில ஆயுதங்கள் வடகொரியாவிலிருந்து பெறப்பட்டதாக, அமெரிக்க அரசுக்குச் சொந்தமான வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவும்( Voice of America) செய்தி வெளியிட்டது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA (Korean Central News Agency), "அமெரிக்க  அரசிற்கு ஆதரவான பத்திரிகை அமைப்புகள் மற்றும் அரைகுறை வல்லுநர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு வட கொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரமற்ற மற்றும் பொய்யான வதந்தியைப் பரப்புகின்றனர்"  எனக் கூறியிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, "ஹமாஸ்  பயன்படுத்திய  ராக்கெட்டுகள் பற்றிய விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/46c3KEk

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.