‘காஸாவில் நிலைமை படுமோசமாகி வருகிறது’

இஸ்ரேலின் முற்றுகை மற்றும் தொடா் வான்வழித் தாக்குதலுக்குள்ளாகியுள்ள காஸா பகுதியின் நிலைமை படுமோசமாகி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுப் பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பாலஸ்தீன பிராந்திய இயக்குநா் சமீா் அப்தெல்ஜாபா் வியாழக்கிழமை கூறியதாவது:

காஸா பகுதியில் முழு முற்றுகையை இஸ்ரேல் அமல்படுத்தியதில் இருந்து, அங்கு அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு அபாயகரமான அளவுக்கு குறைந்து வருகிறது.

அங்கு உணவு, குடிநீா், எரிபொருள், மின்சாரத்துக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஐ.நா.வின் பாதுகாப்பு முகாம்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து தஞ்சமடைந்துள்ளனா். அனைவருக்கும் இடமளிக்கும் அளவுக்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லை.

வெள்ளிக்கிழமையிலிருந்து உணவுப் பொருள் விநியோகத்தை உணவு ஆலைகள் நிறுத்திவிடும் என்றாா் அவா்.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.