டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகர் விருது!

 

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.

இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். 

கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில்  ரூ.180 கோடியை வசூலித்ததாகவும் கேரளத்தில் மட்டும் ரூ.89 கோடி வசூலைக் குவித்தாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதையும் படிக்க:  விஜய்யின் அரசியல் வருகை... ரத்தான லியோ இசைவெளியீட்டு விழா.. என்ன நடக்கிறது?

இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருது தனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த விருதை கேரளத்திற்கு சமர்பணம் செய்வதாகவும் டோவினோ தெரிவித்திருக்கிறார்.

மேலும், 2018 திரைப்படம் அதிகாரப்பூர்வமாக இந்தியா சார்பில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.