முத்தரப்பு டி20 போட்டி: 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து

வெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர், ஆஸி. மற்றும் நியூசி.யில் நடைபெறுகிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 72, குப்தில் 65 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ல் சிறப்பாக பந்துவீசிய அடில் ரஷித், மார்க், மார்க் உட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.  இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியில் டேவிட் மார்லன் 59, அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ட்ரென்ட் போல்ட், மிட்செல் சான்டர், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் வெற்றி பெற்று நியூசிலாந்து 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.