இத்தாலியில் பாரம்பரிய திருவிழா : ஆரஞ்சு பழங்களை எறிந்து மக்கள் உற்சாகம்

ரோம்: இத்தாலி நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய ஆரஞ்சு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்துகொண்டனர். 12-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்படும் பழமையான இந்த திருவிழா தீமையை விரட்டியடிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி ஐவியா நகரில் நடத்தப்பட்ட திருவிழாவில் குதிரை வண்டியில் வந்தவர்கள் மீது மக்களும், மக்கள் மீது வண்டியில் வந்தவர்களும் மாறிமாறி ஆரஞ்சு பழங்களை எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்துகொண்டனர். இந்த கொண்டாட்டத்திற்காக 500 டன் ஆரஞ்சு பழங்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.