அமெரிக்காவின் கடும் நெருக்கடி எதிரொலி: தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க பாகிஸ்தானில் அவசர சட்டம் பிரகடனம்

இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் கடும் நெருக்கடிக்கு பணித்துள்ள பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத அமைப்பு  போன்றவற்றிக்கு பாகிஸ்தானில் முடிவுரை எழுதப்படவுள்ளது. அவசர சட்டத்தின் படி ஐநா பாதுகாப்பு கவுன்சில் பட்டியலில் உள்ள 27 தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் இயங்க முடியாது என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அதிபர் மம்முத் ஹுசைன் கையெழுத்திட்ட அவசர சட்டம் நேற்று முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் 1997 ம் ஆண்டு தீவிரவாத தீவிரவாத ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்களின் சொத்துக்கள் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. லஷ்கர் ஈ தொ ய்  பா உள்ளிட்ட அமைப்புகள் நண்கொடை வசூலிக்க பாகிஸ்தான் ஒழுங்கு முறை ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.