20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக்கணக்கில் நஷ்டம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அறிவிப்பு

மும்பை: நாட்டின் முக்கிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு ரூ.155 கோடி இழப்பை எஸ்பிஐ வங்கி சந்தித்து இருந்தது. அதன் பிறகு சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பை சந்திக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3 ஆம் காலாண்டில் ரூ.2416 கோடி அளவு இழப்பை எஸ்பிஐ சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் ரூ.23,000 கோடியாக அதிகரித்ததுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இது குறித்து எஸ்பிஐ  அதிகாரி கூறுகையில், ஏறக்குறைய ரூ.25,830 கோடி கடன்கள் வாரா கடனாக மாறிவிட்டது. அடுத்து வரும் காலாண்டுகளில் வாராக்கடன் அளவை குறைக்க சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடன் கொடுத்தவர்களின் கடனை திருப்பி வசூலிப்பதில் கடுமையான நிலைப்பாட்டை எஸ்பிஐ எடுத்து வருவதாக அவர் கூறினார். பெரு நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.