பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், சுனில் செத்ரி தலைமையிலான பெங்களூரு எப்சி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதுவரை 15 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 11 வெற்றியுடன் 33 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலை வகிப்பதுடன், பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்துகொண்டது. மொத்தம் 90 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை தகுதி சுற்றில் மட்டும் 71 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த 3 வாரங்களில்தான் உச்சக்கட்ட போட்டிகள் திருப்புமுனையாக நடைபெற உள்ளன. இதில், யார் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெங்களூரு அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும்… புனே, ஜாம்ஷெட்பூர், சென்னை, கேரளா அணிகளும் கோப்பையை முத்தமிட வரிந்துகட்டுகின்றன.  மும்பை, கோவா அணிகளும் கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதனால் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் கால்பந்து ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.