ஜிஎஸ்டி, இ-வே பில் பிரச்னையால் சிறு, குறு ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் மூடும் அபாயம்

திருப்பூர்,: ஜிஎஸ்டி மற்றும் இ-வே பில் பிரச்னையால் சிறு, குறு ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக பின்னலாடை ஜாப் ஒர்க் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களில் பல்வேறு போட்டிகளுக்கு இடையில் குறைந்த லாபத்திற்கு பீஸ் ரேட் அடிப்படையில் ஜாப்-ஒர்க் எடுத்து செய்கின்றனர். ஜி.எஸ்.டி. வரி 5 சதம் வரி செலுத்தினால் மட்டுமே ஜாப்-ஒர்க் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது சரக்குகளை எடுத்துச்செல்லும் போது இ-வே பில்  கட்டாயம் என்ற உத்தரவு கடந்த 1 ம் தேதி முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. தற்போது பில் இருந்தால் மட்டுமே சரக்கு என்ற நிலை உருவாகியுள்ளது. பில் இல்லாமல் ஜாப்-ஆர்டர் நிறுவனங்கள் துணிகளை கொடுப்பதில்லை. இதனால்,திருப்பூர் பகுதியில் 25 சதம் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது.கேரளாவில் இ-வே பில் அமல்படுத்த முடியாது என மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.  ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதம் வரி, இ-வே பில் ஆகியவை முழுமையாக நீக்கினால் மட்டுமே ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் தொடர்ந்து இயக்க முடியும் என பின்னலாடை ஜாப் ஆர்டர் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக திருப்பூரில் நடந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த கேரள நிதியமைச்சரிடம் மேற்கண்ட பிரச்னையில் தீர்வுகாணக்கோரி மனு அளித்தனர்.இதைதொடர்ந்து கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ்ஐசக் கூறியதாவது:  ஜிஎஸ்டி வரி விதிப்பில்,பதிவு பெற்ற ஏற்றுமதி நிறுவனங்கள், மெர்சன்டைசிங் நிறுவனங்களுக்கும், சிறு அளவில் செயல்படும் பதிவு செய்யாத ஜாப் ஒர்க், சப்-கான்ட்ராக்ட் நிறுவனங்களுக்கும் இடையே வரிப் பிடித்தம் செய்யும் பிரச்னையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   அதேபோல் ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஐஜிஎஸ்டி எனப்படும் வரி விதிப்பினாலும் வெளிநாடுகளுடன் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய பெரிய பாதிப்பு ஏற்படும். இத்துடன் இ-வே பில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தும் பிரச்னையிலும் ஜாப் ஒர்க், சப் காண்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். கேரளத்தில் இவே பில் நடைமுறையை அமலாக்க மாட்டோம் என முடிவு செய்துவிட்டோம்.எந்தெந்த சரக்கு போக்குவரத்துக்கு இதை அமலாக்கலாம் என்பது போன்ற விசயங்களில் அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்ய அதிகாரம் அளிக்க வேண்டும்.திருப்பூர் தொழில் துறையினரின் ஜிஎஸ்டி குறித்த கோரிக்கைகளை நான் ஜிஎஸ்டி கவுன்சிலில் நிச்சயம் பேசுவேன்,உங்கள் கோரிக்கைகளுக்கு முழுமையான ஆதரவளிக்கிறேன் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.