டெல்டாவில் வைக்கோல் விலை சரிவு

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் அறுவடை துவங்கி நடந்து வருவதால் வெளிமார்க்கெட்டில் நெல் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் வைக்கோல் விலையும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. கடந்த டிசம்பர் இறுதி வரை வைக்கோல் கட்டு ரூ.250 வரை விலை போனது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வைக்கோல் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.130 முதல் ரூ.150 வரை மட்டுமே விற்பனையாகிறது. தென் மாவட்டங்களில் நடப்பாண்டு பருவமழையால் சம்பா சாகுபடி அமோகமாக உள்ளதால் கால்நடைகளுக்கான வைக்கோல்  தட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது. முன்பெல்லாம் காளான் உற்பத்திக்கு வைக்கோல் வாங்க டெல்டா மாவட்டங்களுக்கு லாரிகளுடன் படையெடுப்பர். தற்போது தென்மாவட்டங்களிலேயே வைக்கோலை காளான் உற்பத்தியாளர்கள் வாங்கி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வைக்கோலை பயன்படுத்த வழியின்றி பெரும்பாலான விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.