சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த கூடாது ... பாகிஸ்தான் பகிரங்க அலறல்

சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை இந்தியா நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் பீதி அடைந்துள்ளது.  இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சஞ்சுவான் முகாமில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்தியா கூறி வருகிறது. முழு விசாரணை முடியும் முன்பே இந்தியா தனது முடிவை அறிவித்துள்ளது. இதை காரணம் காட்டி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஏதாவது தாக்குதலை இந்தியா நடத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அங்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தக்கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.