வெளியானது நடிகர் தனுஷின் ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. 

வரும் பிப்ரவரி முதல் இந்த படம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், அமீர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.