கருண் நாயர் அதிரடியில் கர்நாடகா அபார வெற்றி : 52 பந்தில் 111 ரன் விளாசினார்

விஜயநகரம்: சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில், கர்நாடகா அணி 78 ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வென்றது. ஆந்திரா கிரிக்கெட் சங்க விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தமிழகம் முதலில் பந்துவீசியது. கர்நாடகா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய கருண் நாயர் 111 ரன் (52 பந்து, 8 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினார். மயாங்க் அகர்வால் 13, சமர்த் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். தமிழக பந்துவீச்சில் அதிசயராஜ் டேவிட்சன் 5 விக்கெட், எம்.அஷ்வின் 3, கே.விக்னேஷ், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழகம் 16.3 ஓவரிலேயே 101 ரன்னுக்கு சுருண்டது. வாஷிங்டன் சுந்தர் 34, கேப்டன் விஜய் ஷங்கர் 20, சஞ்சய் யாதவ் 19, ஜெகதீசன் 16 ரன் எடுத்தனர். பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானது தமிழக அணிக்கு பின்னடைவை கொடுத்தது. கர்நாடகா பந்துவீச்சில் பிரவின் துபே 4, கே.கவுதம் 2, அரவிந்த் நாத், ஸ்டூவர்ட் பின்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கர்நாடகா 4 புள்ளிகள் பெற்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.