உணவு பொருட்கள் விலை உயர்வால் சில்லரை விலை பண வீக்கம் அதிகரிப்பு

புதுடெல்லி: சில்லரை விலை பண வீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 5.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.  சில்லரை விலை பண வீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 4.88 சதவீதமாகவும், 2016ம் ஆண்டு டிசம்பரில் 3.41 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தில் இது 5.21 சதவீதமாக உயர்ந்து விட்டது. உணவு பொருட்கள், முட்டை, காய்கறி விலை உயர்வே இதற்கு காரணம்.   அதேநேரத்தில், பருப்பு வகைகள் தானியங்கள் விலை ஓரளவு குறைந்துள்ளது.  உணவு பொருட்களுக்கான பண வீக்கம் முந்தைய மாதத்தில் 4.42 சதவீதமாக இருந்தது, கடந்த மாதம் 4.96 சதவீதமாக உயர்ந்து விட்டது. ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை 4 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. பண வீக்கத்தை குறைக்கும் நோக்கில் கடன் வட்டி குறைப்பதில் கெடுபிடி காட்டி வந்தது. தற்போது பண வீக்கம் அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வட்டியை குறைக்க வாய்ப்புகள் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.