வரத்து அதிகரிப்பால் சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, சோகத்தூர், அதகப்பாடி, இண்டூர், பாப்பாரப்பட்டி, அக்ரஹாரம், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயத்தை பதப்படுத்தி, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னை, சேலம், கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளும் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர். தர்மபுரி உழவர் சந்தை, தினசரி மார்க்கெட்டுக்கு, வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை சரிந்து ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டிலும் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.50ம், பூண்டு ஒரு கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.