6 நாடுகளில் ஒரே நாளில் 11 ஷோரூம் திறந்தது மலபார் கோல்டு

சென்னை: மலபார் கோல்டு நிறுவனம் நேற்று 6 நாடுகளில் 11 ஷோரூம்களை திறந்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய நகைக்கடைகளில் ஒன்றான மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் நேற்று ஒரே நாளில் ஐக்கிய அரபு நாடுகளான கத்தார், ஓமன் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இந்தியாவில் தெலங்கானாவில் உள்ள வாரங்கல் உட்பட 6 நாடுகளில் 11 ஷோரூம்களை ஒரே நாளில் திறந்துள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் 208 ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகளாவிய சந்தையில் நாங்கள் பரவலான அங்கீகாரத்தைப் பெறுகிறோம். இதுவே உலகளவில் விரிவாக்கம் செய்ய முக்கிய காரணம் என மலபார் குழும தலைவர் எம்.பி. அஹமது தெரிவித்தார். இந்த ஆண்டு 50 ஷோரூம்களை மலபார் கோல்டு திறக்க உள்ளதாக மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அஹமது கூறினார்.‘இந்த நாட்டில் அதிக ஷோரூம்கள் மற்றும் உற்பத்தி பிரிவுகளை அமைத்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி மேக் இன் இந்தியா’ முயற்சியை மேம்படுத்துவதாக மலபார் கோல்டு - டைமண்ட்ஸ், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனரான ஓ அஷெர் தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.