இந்திய ஆர்வலர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடியேற்ற உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார். உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ரவி ரக்பீர். கடந்த 1991-ம் ஆண்டு பார்வையாளர் விசா மூலம் கரிபீயன் தீவுகளில் இருந்து அமெரிக்கா சென்றார். 1994ல் அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்றார். ஆனால், 2006ல் ஒரு மோசடி வழக்கில் 22 மாதங்கள் சிறை சென்றதால், நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என கடந்த 10 ஆண்டுகளாக அச்சுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நியூயார்க்கில் குடியேற்றத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரவி ரக்பீரை நேற்று கைது செய்தனர். அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற  உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.