​விஜய் மல்லையாவுக்கு ஜாமினை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு!

விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில், ஏப்ரல் 2ம் தேதி வரை அவருக்கு ஜாமினை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளிடம் இருந்து வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால், தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 

இந்நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு விஜய் மல்லையா நேரில் ஆஜரானார். வாதங்களை கேட்ட நீதிமன்றம், மல்லையாவுக்கு வழங்கிய ஜாமினை வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.