​அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்கள் - சூட்டிங் செல்வாரா சிம்பு?

கெளதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இதனையடுத்து மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் இம்மாத (ஜனவரி) இறுதியில் துவங்கவுள்ள நிலையில் இது தவிர சிம்புவே இயக்கி, நடிக்கவுள்ள படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிம்பு புதிய படமொன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை ‘அமர்க்களம், ஜெமினி, வசூல் ராஜா MBBS, அசல்’ போன்ற படங்களை இயக்கிய சரண் இயக்கவுள்ளாராம்.

வெகு விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. AAA படத்தின் சர்ச்சையால் சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சிம்புவின் நகர்வு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.