லாட்ஜில் அழகியுடன் டிஎஸ்பி கும்மாளம்?: எஸ்பி விசாரணை

தர்மபுரி: தர்மபுரியில் தனியார் ஓட்டல் விடுதியில், டிஎஸ்பி ஒருவர், கும்மாளத்தில் ஈடுபடுவதாக எஸ்பிக்கு வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட காவல் துறையில், தர்மபுரி, பென்னாகரம், அரூர் 3 டிஎஸ்பி சரகம் உள்ளது. இது தவிர மாவட்ட குற்றப்பிரிவு, வன்கொடுமை தடுப்பு பிரிவு, மதுவிலக்கு பிரிவு போன்றவற்றிலும் டிஎஸ்பி பதவியிடம் உள்ளது. இந்த பதவியிடத்தில் உள்ள டிஎஸ்பி ஒருவர், தர்மபுரி நகரில் உள்ள தனியார் ஓட்டல் விடுதியில் தங்கியுள்ளார். அவருடைய விடுதிக்கு பகல், இரவு நேரங்களில் அழகிகள் சிலர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாவட்ட எஸ்பி பண்டிகங்காதருக்கு புகார் சென்றது. அவர் தனிப்படை அமைத்து ரகசிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் தனிப்படை சம்மந்தப்பட்ட விடுதியை கண்காணித்து வருகின்றனர்.இது குறித்து எஸ்பி பண்டிகங்காதரிடம் கேட்டபோது, டிஎஸ்பி மீது புகார் வந்தது உண்மை தான். அது தொடர்பாக விசாரணை நடத்தினேன். அவருக்கு கோட்டர்ஸ் இல்லாததால் லாட்ஜில் தங்கியிருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் தான் அவ்வப்போது வந்து பார்த்து செல்கின்றனர். மற்றபடி யாரும் அங்கு வருவதில்லை. அவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சிலர் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகின்றனர், என்றார். டிஎஸ்பி விடுதியில் தங்கியிருக்கும் விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.