ரஜினிகாந்தின் ரசிகன் ‘கஜினிகாந்த்’

ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் கஜினிகாந்த் படத்தின் டீசர் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

‘ஹரஹர மகா தேவகி’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கஜினிகாந்த்’.இதில் ஆர்யா, நடிகர் ரஜினிகாந்தின் ரசிகராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தப் படத்தில் ‘வனமகன்’ நாயகி சாயீஷா கதாநாயகியாக நடித்துள்ளார். டீசரில் ரஜினியின் ஃபேனான ஆர்யாவிற்கு ஞாபக மறதி அதிகம் ஏற்படுவதால் அவரை நண்பர்கள் கஜினிகாந்த் என்று கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் த்ரிஷா – ஹன்ஷிகா இணைந்து இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது, படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் எதிர்ப்பார்பை அதிகப்படுத்தும் வகையில் டீசர் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இரண்டு நாளாகியும் தொடர்ந்து  ட்விட்டர் ட்ரெண்டில்  இடம் பிடித்திருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.