கடும்பனியால் தேயிலைத்தூள் விலை உயர்வு

கோவை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் பெய்து வரும் கடும்பனியால் பசுந்தேயிலை மகசூல் குறைந்து தேயிலைத்தூள் உற்பத்தி மற்றும் வரத்து 25 சதவீதம் குறைந்தது. இதனால் தேயிலை துாளின் விலை கிலோவிற்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் கடும் பனி பெய்ததால் பசுந்தேயிலை செடியிலேயே கருகியது. இதனால் பசுந்தேயிலை உற்பத்தி 25 சதவீதம் குறைந்து, அதற்கேற்ப தேயிலைத்தூள் உற்பத்தியும் குறைந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக கோவை வர்த்தக மையத்தில் வாரம்தோறும் நடைபெறும் விற்பனைக்கு, சராசரியாக வர வேண்டிய 5 லட்சம் கிலோ, 4 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது. வரத்து 25 சதவீதம் குறைந்ததால், 2 மாதத்திற்கு முன்பு உள்ளூர் ரகம் கிலோ சராசரி விலை ரூ.95ல் இருந்து ரூ.100ஐ எட்டியுள்ளது. ஏற்றுமதி ரகம் கிலோ ரூ.84ல் இருந்து ரூ.89க்கு உயர்ந்துள்ளது. சராசரியாக கிலோவிற்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. விற்பனையும் குளிர்காலம் காரணமாக அதிகரித்து,  கடந்த 2 மாதமாக விற்பனை வார விற்பனை சராசரியாக ரூ.2.75 கோடியில் இருந்து ரூ.75 லட்சம் உயர்ந்து, ரூ.3.50 கோடிக்கு விற்று வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.