ஆதார் இணையதளத்தில் ஹேக்கர்கள் புகுந்து விளையாடும் அபாயம் : எச்சரிக்கும் ஆஸி., தகவல் பாதுகாப்பு அமைப்பு

மெல்போர்ன்: ஆதார் இணையதளத்தின் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலிய நாட்டின் தகவல் பாதுகாப்பு அமைப்பான டிராய் ஹன்ட் எச்சரித்துள்ளது. ஆதார் இணையதள பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக டிராய் ஹன்ட் தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளத. அதில் இந்தியாவின் ஆதார் முறை உண்மையில் பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை என குறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து யார் வேண்டுமானாலும் அதில் உள்ள தகவல்களை இயக்கும் வகையில் தான் ஆதார் இணையதள பாதுகாப்பு உள்ளது என கூறியுள்ளது. மேலும் அதில் இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதன் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும், மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது என டிராய் ஹன்ட் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினால் அதனை தடுக்க உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்றும் வினவியுள்ளது. ஹேக்கர்கள் நினைத்தால் ஆதார் தகவல்களை எளிதாக எடுத்து விட முடியும். எனவே ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.