வேதாரண்யத்தில் கடல் சீற்றம் : மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசுவதாலும், கடல் சீற்றமாக காணப்படுவதாலும் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, வௌ்ளபள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதி மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விடுகளில் தங்கள் வலைகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.