ஓயாமல் அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த இந்த இடத்த மட்டும் பிடிச்சு அழுத்துங்க… அழுகை நின்றுவிடும்…!

நம்மில் பெரும்பாலானோருக்கு அழும் குழந்தையின் அருகில் போகவே பயம். ஏனென்றால் அதன் அழுகையை எப்படி கட்டுப்படுத்துவது என்று நமக்குத் தெரியாது. பதட்டமாகிவிடுவோம். ஆனால் அழும் குழந்தையின் அழுகையை உடனடியாக நிறுத்துவதற்கு மிக எளிமையான வழிகள் உண்டு.

குழந்தையின் உடலில் இரண்டு புள்ளிகள் இருக்கின்றன. அந்த இரண்டு புள்ளிகளை வைத்து அழுத்தினால் போதும்… குழந்தை அழுகையை நிறுத்திவிடும்.அப்படி எந்த இரண்டு புள்ளிகளை வைத்து அழுத்த வேண்டும்.

பேசும் வயது வரும்வரை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் தங்களுடைய பெற்றோரை தொடர்பு கொள்ளும். பசியாக இருந்தாலும் உடல் அசதியாக இருந்தாலும், உடலில் வேறு ஏதேனும் பிரச்னையாக இருந்தாலும் அழுகையின் மூலம் தான் வெளிப்படுத்தும்.

சில நேரங்களில் குழந்தைகளுக்கு தலைவலி ஏதேனும் உண்டானால் அப்போது வரும் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியாது. பல மணிநேரம் கூடு அழும். அதுபோன்ற சமயங்களில் என்ன செய்ய வேண்டும்.

முறை 1:
குழந்தை நிறுத்தாமல் அழுதுகொண்டே இருக்கும்போது குழந்தையின் இரண்டு கால்களின் பெருவிரல் பகுதியையும் சுமார் 3 நிமிடங்கள் உங்கள் கை பெருவிரலால் நன்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு உண்டான தலைவலி சரியாகிவிடும்.

முறை 2:
பெரும்பாலும் குழந்தைகள் அழுவது வயிற்று வலியால் தான். குடித்த பால் செரிமானம் ஆகாமல் இருந்தாலும் வயிற்று வலி உண்டாகும். அதனால் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

அந்த சமயத்தில் குழந்தையின் பாதத்தின் மையப்பகுதியில் கையின் பெருவிரலை வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இந்த இரண்டு முறையையும் கையாண்டால் எப்பேர்ப்பட்ட குழந்தையின் அழுகையாக இருந்தாலும் நிறுத்திவிடலாம்

The post ஓயாமல் அழும் குழந்தையின் அழுகையை நிறுத்த இந்த இடத்த மட்டும் பிடிச்சு அழுத்துங்க… அழுகை நின்றுவிடும்…! appeared first on Tamil Health Tips.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.