உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 26.37 கோடியாக உயர்வு : அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 1.16 லட்சத்தை தாண்டியது!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.79 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.37 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,37,13,273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,79,88,383 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 லட்சத்து 41 ஆயிரத்து 532 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்கு தற்போது 2,04,83,358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 87,077 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா  - பாதிப்பு - 4,95,70,925,   உயிரிழப்பு -8,04,976,    குணமடைந்தோர் - 3,92,82,939 இந்தியா        -  பாதிப்பு - 3,46,05,439,  உயிரிழப்பு -  4,69,532,   குணமடைந்தோர் - 3,40,28,506பிரேசில்        -  பாதிப்பு - 2,21,05,872,  உயிரிழப்பு -  6,15,020,  குணமடைந்தோர் - 2,13,39,118இங்கிலாந்து- பாதிப்பு -  1,02,76,007,  உயிரிழப்பு -  1,45,140,  குணமடைந்தோர் -  90,95,983ரஷ்யா           -  பாதிப்பு -   96,69,718,   உயிரிழப்பு -  2,76,419,   குணமடைந்தோர் -   83,64,932     தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-துருக்கி        - 88,18,144பிரான்ஸ்     -  77,25,114ஈரான்          - 61,21,757ஜெர்மனி         - 59,53,310அர்ஜெண்டினா- 53,32,629ஸ்பெயின்       - 51,74,720கொலம்பியா -  50,71,817இத்தாலி          - 50,43,620இந்தோனேசியா- 42,56,687மெக்சிகோ     - 38,87,873

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.