பண்டிகை காலம்: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு

பண்டிகை காலங்களையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழா காலங்களையொட்டி மக்கள் பெரிதளவில் சொந்த ஊர் செல்லும்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், சரக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.