Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட்டில் அசாதாரண இதயத்துடிப்பு; இது ஆபத்தா?

என் வயது 40 வயது. சமீபத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்தபோது டிரெட்மில் டெஸ்ட்டில் அப்நார்மல் ஹார்ட் பீட் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அசாதாரண ஹார்ட் பீட் என்பது ஆபத்தானதா? அது எதை உணர்த்துகிறது?

- அண்ணாமலை (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

``இதயத்தின் முறையற்ற துடிப்பு, அரித்மியா (Arrhythmia) என்று சொல்லப்படும். இதயம் ஒரே மாதிரி வேகத்தில், அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 90 முறை வரை துடிப்பது சாதாரணமானது. 100 முறைக்கு மேல் சமச்சீரன்றி துடிப்பதை டாகிகார்டியா (Tachycardia) என்பார்கள். காரணமே இல்லாமல் இதயம் வேகமாகத் துடிப்பது நல்லதல்ல. அரித்மியா பாதிப்புக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

60-க்குக் கீழே துடித்தால் அதை பிராடிகார்டியா ( Bradycardia ) என்பார்கள். எனவே இதயத் துடிப்பானது சீரான இடைவெளியில் ஒரு ரிதத்துடன் இருக்க வேண்டும். இதயத்தின் இயல்பான செயல்பாடு தடுமாறும்போதோ, கிருமித் தொற்றினாலோ இது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.

Also Read: செக் ஃப்ரம் ஹோம் - 4 - இதயத்தில் ஏதோ ஒன்று... இழுக்குது கொஞ்சம் இன்று! - ஹார்ட் அட்டாக் அலெர்ட்

இதயம் வேகமாகவோ, மெதுவாகவோ துடிப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதற்காகவே இப்போது இதயநோயியலில் ஒரு பிரிவினராக எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் எனப்படும் நிபுணர்கள் இருக்கிறார்கள்.

இதயத்தின் துடிப்பை அறிந்து அது அசாதாரணமாக இருந்தால் அதற்கான காரணமறிந்து சரியான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள். சிலருக்கு இதயம் திடீரென 100-ஐக் கடந்து 150, 300 வரைகூட துடிப்பதைப் பார்க்கிறோம்.

Treadmill (Representational Image)

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாமா?

இதயத்தின் இரு வேறு இடங்களிலிருந்து இதயத்துடிப்புக்கான தூண்டல்கள் ஏற்படுவதால் வரும் பாதிப்பு இது. எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட், `ரேடியோ அப்ளேஷன் என்ற முறையில் நார்மலாக தூண்டப்படும் இதயத்துடிப்பை மட்டும் வைத்துவிட்டு, மற்றதைத் தீய்த்துவிடுவார்கள். அதேபோல இதயம் மிக மெதுவாகத் துடித்தாலும் பேஸ்மேக்கர் என்ற கருவியைப் பொருத்தி, அதைச் சீரடையச் செய்வார்கள். எனவே அசாதாரண இதயத்துடிப்பு என்பது அலட்சியப்படுத்தக்கூடிய விஷயமல்ல. மருத்துவரை அணுகி, காரணம் அறிந்து சரியான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்."

கோவிட் தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் உச்சத்தில் இருந்த நேரம்... நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு பக்கமும், கொத்துக்கொத்தான மரணங்கள் இன்னொரு பக்கமுமாக மக்கள் பீதியில், பதற்றத்தில் இருந்தனர். வதந்திகளால் மிரண்டுபோயிருந்த அவர்களது பயத்தைப் போக்க, நோய்த்தொற்று குறித்த சரியான தகவல்களைக் கொண்டு சேர்க்க `Covid Questions என்ற பகுதியை விகடன் இணையதளத்தில் ஆரம்பித்தோம். கோவிட் தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கு அந்தந்த துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து தெளிவான விளக்கங்களைப் பெற்றுத் தரும் `கோவிட் கொஸ்டீன்ஸ் பகுதி, 150 நாள்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் வாசகர்களின் சந்தேகங்கள் ஓய்ந்தபாடாக இல்லை.
Covid Questions
தொடக்கத்தில் கோவிட் தொடர்பாக மட்டும் கேள்வி கேட்ட வாசகர்கள், தற்போது உடல் ஆரோக்கியம் தொடர்பான மற்ற சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் வாசகர்கள். இனி அதற்கும் நாங்கள் ரெடி! ஆம், இனிமேல் கோவிட் தொடர்பாக மட்டுமல்ல; உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும், வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! என்ன... ஆரம்பிப்போமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.