ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் சமீபகாலமாக அப்பாவிமக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிககரித்துள்ளன. இதையடுத்து, தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையை போலீஸாரும் ராணுவத்தினரும் முடுக்கிவிட்டுள்ளனர். சோபியான் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நடந்தஎன்கவுன்ட்டர்களில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் ட்ரால் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓரிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புபடையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம்நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறந்தவர் பெயர் ஷாம் சோபி என்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தளபதியாக செயல்பட்ட முக்கியதீவிரவாதி என்றும் தெரியவந்துள்ளதாக காஷ்மீர் போலீஸ்ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.