ஊராட்சி தலைவியாக வெற்றி 21 வயது பெண் இன்ஜினியர் 90 வயது மூதாட்டி அசத்தல்

கடையம்: நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இளம்பட்டதாரிகள், 90 வயது மூதாட்டி கிராம ஊராட்சி தலைவிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில், 23 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவராக சாருகலா (21) 3,336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர், பிஇ பட்டதாரி. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம், புத்தநேரி கிராம ஊராட்சி தலைவராக மனோஜ்குமார் (22) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதே ஒன்றியத்தில் சிவந்திபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு பெருமாத்தாள் என்ற 90 வயது மூதாட்டி வெற்றி பெற்றுள்ளார். இவர், மொத்தம் 1,561 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி 426 வாக்குகள் பெற்றார். பெருமாத்தாள் கூறுகையில், ‘‘எங்களது குடும்பம் திமுக பாரம்பரியமிக்கது. சிவந்திபட்டி ஊராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்’’ என்றார்.* மனைவி ஊராட்சி தலைவி கணவர் வார்டு உறுப்பினர்அம்பாசமுத்திரம் யூனியனில் 13 ஊராட்சிகள் உள்ளன. இதில் அடையக்கருங்குளம் ஊராட்சி தலைவியாக  ராஜேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் மதனகிருஷ்ணன், ஏற்கனவே 5வது வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.* சீட்டு குலுக்கி வெற்றியாளர் தேர்வுஅம்பாசமுத்திரம் ஒன்றியம் மன்னார்கோவில் ஊராட்சி 2வது வார்டில் வேட்பாளர்கள் மீனா, சுப்பம்மாள் ஆகிய இருவரும் தலா 90 வாக்குகள் பெற்றிருந்ததால் சீட்டு குலுக்கி போட்டு தேர்வு செய்யப்பட்டது. இதில் குலுக்கல் முறையில் சுப்பமாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.