அதர்வா, ஹன்சிகாவை இயக்குகிறார் ‘டார்லிங்’ டைரக்டர்!

’டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்து அதர்வா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான படம், ’டார்லிங்’. நிக்கி கல்ராணி, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தை இயக்கினார். இந்தப் படம் சுமாராக ஓடியது. இதையடுத்து சாம் ஆண்டன் இயக்கும் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். வரும் 10-ம் தேதி ஷூட்டிங் தொடங்குகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.